2021ஆம் ஆண்டு நடைபெற்ற திருமதி உலக அழகிப் போட்டியில் புஷ்பிகா டி சில்வாவின் கிரீடம் பலவந்தமாக அகற்றப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கில், முன்னாள் திருமதி உலக அழகி கரோலின் ஜூரி மற்றும் மொடல் சுலா பத்மேந்திரா ஆகியோர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
கொழும்பு பிரதம நீதவான் அசங்க எஸ். போதராகம இன்று இந்த உத்தரவை பிறப்பித்தார்.
குறித்த போட்டியின் போது மேடைக்குச் சென்ற இருவரும், புஷ்பிகா டி சில்வாவுக்கு சூட்டப்பட்டிருந்த கிரீடத்தை அகற்றியதுடன், அவருக்கு காயம் ஏற்படுத்தியதாகவும் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
எனினும், குற்றச்சாட்டுகளை நியாயமான சந்தேகத்திற்கு அப்பாற்பட்ட வகையில் நிரூபிக்க அரசுத் தரப்பு தவறியுள்ளதாக நீதவான் தீர்ப்பளித்தார்.
இதனிடையே, வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில் சுலா பத்மேந்திரா உயிரிழந்துள்ளதால், அவரின் சார்பில் அவரது பிணையாளர் நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்தார்.








