சபாநாயகர் தலைமையில் பாராளுமன்ற நடவடிக்கைகள் தற்போது ஆரம்பமாகியுள்ளன.
செப்டெம்பர் மாதத்தின் முதலாவது பாராளுமன்ற அமர்வு வாரம் இன்று (08) ஆரம்பமாகிறது.
இன்றைய பாராளுமன்ற நடவடிக்கைகளில், மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் 2489/22 மற்றும் 2493/19 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானிகளில் வெளியிடப்பட்டுள்ள இரண்டு கட்டளைகள் அங்கீகாரத்திற்காக விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.
அதனைத் தொடர்ந்து, எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்படும் ஒத்திவைப்பு வேளைப் பிரேரணை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
இன்றைய பாராளுமன்ற நடவடிக்கைகளின் நேரடி ஒளிபரப்பை கீழே காணலாம்.









