நாட்டில் நிலவும் வறட்சியான வானிலை காரணமாக 35,169 குடும்பங்களைச் சேர்ந்த 115,586 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
ஏழு மாவட்டங்களில் உள்ள 35 பிரதேச செயலகப் பிரிவுகளைச் சேர்ந்த மக்கள் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், குடிநீர் தட்டுப்பாட்டை எதிர்கொள்ளும் மக்களுக்கு தொடர்ந்து குடிநீர் விநியோகிப்பதற்குத் தேசிய அனர்த்த நிவாரண சேவை மையம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதற்கமைய, ஏழு மாவட்டங்களில் 34,628 குடும்பங்களைச் சேர்ந்த 113,406 பேருக்கு குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.









