டிட்வா சூறாவளியினால் கடுமையாக சேதமடைந்த நானுஓயா – கிரேட் வெஸ்டர்ன் இடையிலான ரயில் பாதையின் புனரமைப்புப் பணிகள் எதிர்வரும் டிசம்பர் மாதத்திற்குள் நிறைவுசெய்யப்பட்டு, பொதுமக்களின் பயன்பாட்டிற்காக மீண்டும் திறக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நுவரெலியா மாவட்ட ஊடகப் பிரிவின் தகவலின்படி, நுவரெலியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மஞ்சுள சுரவீர ஆராச்சி, அதிகாரிகள் குழுவுடன் இணைந்து பாதிக்கப்பட்ட ரயில் பாதைப் பகுதியில் இடம்பெற்று வரும் புனரமைப்புப் பணிகளை நேரில் பார்வையிட்டுள்ளார்.
ரயில் பாதையின் புனரமைப்புப் பணிகள் தற்போது துரிதமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்தத் திட்டத்திற்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றி வரும் ரயில்வே திணைக்கள அதிகாரிகளின் முயற்சிகள் பொதுமக்களின் பாராட்டுக்குரியவை என நாடாளுமன்ற உறுப்பினர் மஞ்சுள சுரவீர ஆராச்சி தெரிவித்துள்ளார்.
புனரமைப்புப் பணிகள் நிறைவடைந்ததும், சூறாவளியின் தாக்கத்தினால் பாதிக்கப்பட்ட மலையகத்தின் முக்கியமான போக்குவரத்து இணைப்பு மீண்டும் வழமைக்குத் திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.








