ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலுக்கு சதித்திட்டம் தீட்டியமை மற்றும் அதற்கு உடந்தையாக இருந்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் 25 பிரதிவாதிகளுக்கு எதிராக கொழும்பு நிரந்தர மூவரடங்கிய மேல் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வரும் வழக்கின் தீர்ப்பை எதிர்வரும் செப்டெம்பர் 22ஆம் திகதி அறிவிக்க நீதிபதிகள் குழாம் தீர்மானித்துள்ளது.
ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் சதித்திட்டம் தீட்டியமை உள்ளிட்ட 23,000க்கும் அதிகமான குற்றச்சாட்டுகளின் கீழ் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் பிரதிவாதிகள் தங்களது தற்காப்பு வாதங்களை கடந்த 17ஆம் திகதி கொழும்பு நிரந்தர மூவரடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் முன்னிலையில் முன்வைக்க ஆரம்பித்தனர்.
நவரத்ன மாரசிங்க, ராமநாதன் கண்ணன் மற்றும் சுஜீவ நிஸ்சங்க ஆகிய நீதிபதிகள் அடங்கிய மூவரடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.









