இலங்கைக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியின் 2ஆம் நாள் ஆட்டத்தில் மீண்டும் களமிறங்கிய இந்திய விக்கெட் காப்பாளர் ரிஷப் பான்ட், களத்துக்குத் திரும்பிய சிறிது நேரத்திலேயே அதிரடி காட்டினார்.
முதல் நாள் ஆட்டத்தில் மணிக்கட்டு காயம் காரணமாக ஆட்டமிழக்காமல் வெளியேறிய ரிஷப் பான்ட், 2ஆம் நாளில் மீண்டும் களமிறங்கியதும் ஃபைன் லெக் திசையில் பிரமாண்டமான சிக்ஸர் ஒன்றை விளாசினார்.
அந்த சிக்ஸர் சின்ஹலீஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் (SSC) மைதானத்தின் கூரையில் சென்று விழுந்தது.
பின்னர் வெளியான காணொளிக் காட்சிகளில், குறித்த பந்து கூரையில் பொருத்தப்பட்டிருந்த சூரிய மின்கலன் ஒன்றில் மோதி அதனை சேதப்படுத்தியமை தெரியவந்துள்ளது








