சர்வஜன அதிகாரத்தின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான திலித் ஜயவீரவின் வேண்டுகோளுக்கிணங்க, இலங்கையிலுள்ள சீனத் தூதரகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட அத்தியாவசிய பாடசாலை உபகரணங்கள் மற்றும் உலர் உணவுப் பொருட்கள் விநியோகிக்கும் வேலைத்திட்டம் 24.06.2026 நடத்தப்பட்டது.
சீனத் தூதுவர் ஷி ஷென்ஹொங் தலைமையில் இந்த பாடசாலை உபகரணங்கள் மற்றும் உலர் உணவுப் பொருட்கள் விநியோகிக்கும் வேலைத்திட்டம் காலி, அங்குலுகஹ மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது.
இதன்போது, அந்த வித்தியாலயத்தில் கல்வி கற்கும் 500 மாணவர்களுக்குத் தேவையான அத்தியாவசிய பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
அத்துடன், அப்பிரதேசத்திலுள்ள குறைந்த வருமானம் பெறும் 200 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் அடங்கிய நிவாரணப் பொதிகளும் இதன்போது விநியோகிக்கப்பட்டன.








