வத்தேகம பகுதியில் நான்கு வயது சிறுமியை முச்சக்கரவண்டியில் அழைத்துச் சென்று கைவிட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் பெண்ணொருவரும் ஆணொருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஹாலிஎல பொலிஸாரால் இன்று (14) காலை இருவரும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட பெண் குறித்த சிறுமியின் தாய் எனவும், ஆண் அவரது முறையற்ற உறவுக்காரர் எனவும் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.சிறுமியை வத்தேகம பகுதியில் கைவிட்ட பின்னர் சந்தேகநபர்கள் அங்கிருந்து சென்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மேலதிக விசாரணைகளுக்காக கைது செய்யப்பட்ட இருவரும் வத்தேகம பொலிஸ் நிலையத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளனர்.









