இலங்கையின் 79ஆவது தேசிய சுதந்திர தினக் கொண்டாட்ட விழாவை கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் நடத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பான முதற்கட்டக் கலந்துரையாடல், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில் நேற்று (18) அலரி மாளிகையில் நடைபெற்றது.
இதன்போது, இம்முறை சுதந்திர தின விழாவின் தொனிப்பொருள், ஒழுங்கமைப்பு நடவடிக்கைகள், நிகழ்ச்சி நிரல், சமய நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டன.
இந்தக் கலந்துரையாடலில் அமைச்சர்களான ஹினிதும சுனில் செனெவி, வசந்த சமரசிங்க, சந்தன அபேரத்ன, சமந்த வித்யாரத்ன மற்றும் பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன ஆகியோர் கலந்துகொண்டனர்.
மேலும், நிதி அமைச்சு, பாதுகாப்பு அமைச்சு, கல்வி அமைச்சு, வலுசக்தி அமைச்சு, மேல் மாகாண சபை உள்ளிட்ட அரச நிறுவனங்களின் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.








