2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட விவாதத்துக்கு முன்னதாக, பொதுமக்களின் கருத்துக்கள், தேவைகள் மற்றும் எதிர்பார்ப்புகளை பெற்றுக்கொள்ளும் விசேட வேலைத்திட்டம் ஒன்றை எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகம் ஆரம்பித்துள்ளது.
“Tell the Leader of the Opposition” என பெயரிடப்பட்டுள்ள இந்த வேலைத்திட்டத்தின் மூலம், பொதுமக்களின் உண்மையான தேவைகள், எதிர்பார்ப்புகள் மற்றும் கவலைகளை எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் கவனத்திற்கு கொண்டு வந்து, அவற்றை எதிர்வரும் வரவு செலவுத் திட்ட விவாதத்தில் பிரதிபலிக்கச் செய்வதே நோக்கமாகும்.
அரசாங்கத்தின் கொள்கைகள் தொடர்பான முன்மொழிவுகள் மற்றும் விமர்சனங்களை முன்வைக்கும்போது, பொதுமக்களின் கருத்துக்களையும் தேவைகளையும் கருத்திற்கொள்ள இந்த வேலைத்திட்டம் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முந்தைய வரவு செலவுத் திட்ட விவாதங்களின்போதும் பொதுமக்களிடமிருந்து கருத்துக்கள் மற்றும் முன்மொழிவுகள் பெறப்பட்டிருந்த நிலையில், இந்த ஆண்டு அந்த நடவடிக்கை மிகவும் பயனுள்ள மற்றும் ஆக்கபூர்வமான முறையில் மறுசீரமைக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய, பொதுமக்கள் தங்களது கருத்துக்கள் மற்றும் 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளை 2026 நவம்பர் 1ஆம் திகதி வரை சமர்ப்பிக்க முடியும்.
WhatsApp: 070 691 2654
மின்னஞ்சல்: oppositionleaderoffice@gmail.
தபால் மூலம்:
“Tell the Leader of the Opposition”
Budget Proposals – 2027
Office of the Leader of the Opposition of Parliament
Sri Jayewardenepura-Kotte.









