இலங்கை தேசிய ஆடவர் கிரிக்கெட் அணி எதிர்வரும் ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்த சுற்றுப்பயணத்தின் ஆரம்பமாக, பாகிஸ்தான் அணிக்கு எதிராக T20 சர்வதேச போட்டித் தொடரில் இலங்கை அணி விளையாடவுள்ளது.
அதனைத் தொடர்ந்து, இலங்கை, பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு ஒருநாள் சர்வதேச போட்டித் தொடர் நடைபெறவுள்ளது.
இதன் பின்னர், இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருடன் இலங்கை அணியின் பாகிஸ்தான் சுற்றுப்பயணம் நிறைவடையும் என இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.








