இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ஷ, இன்று (07) பிற்பகல் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
இதன்போது, அவரை எதிர்வரும் ஒக்டோபர் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
‘சிரிலிய சவிய’ கணக்கு தொடர்பான விசாரணைகளுக்கு அமைவாக இன்று காலை இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் ஷிரந்தி ராஜபக்ஷ கைது செய்யப்பட்டார்.
இதேவேளை, குறித்த வழக்கு தொடர்பான விசாரணைகளின் கீழ் இன்று கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட தேசிய சேமிப்பு வங்கியின் முன்னாள் தலைவர் பிரதீப் காரியவசம் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.








