வெளிநாடுகளில் உள்ள 63 இலங்கை தூதரகங்கள் மற்றும் தூதரகப் பணிமனைகளின் உத்தியோகபூர்வ இணையத்தளங்கள் தற்போது பொதுமக்களின் பயன்பாட்டுக்காக செயல்பாட்டுக்கு வந்துள்ளதாக வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு அறிவித்துள்ளது.
அமைச்சின் பொதுவான இணையத்தள தளத்தின் (Common Website Platform) கீழ் உருவாக்கப்பட்டுள்ள இந்த இணையத்தளங்கள், உலகளாவிய ரீதியில் இலங்கையின் இருப்பை வலுப்படுத்துவதுடன், வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களுக்கான டிஜிட்டல் தொடர்பை மேம்படுத்தும் முக்கிய நடவடிக்கையாக அமைந்துள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
புதிய இணையத்தளங்கள் ஊடாக தூதரக மற்றும் கொன்சியூலர் சேவைகள், இராஜதந்திர நடவடிக்கைகள், தூதரகங்கள் மற்றும் உயர்ஸ்தானிகராலயங்களின் அறிவிப்புகள் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை பொதுமக்கள் பெற்றுக்கொள்ள முடியும்.
புதிதாக செயல்பாட்டுக்கு வந்துள்ள இணையத்தளங்களில் சில:
ருமேனியாவின் புக்கரெஸ்ட் இலங்கைத் தூதரகம் – www.emb-bucharest.gov.lk நெதர்லாந்தின் தி ஹேக் இலங்கைத் தூதரகம் – www.emb-hague.gov.lk
எகிப்தின் கெய்ரோ இலங்கைத் தூதரகம் – www.emb-cairo.gov.lk பிரேசிலியாவின் பிரசிலியா இலங்கைத் தூதரகம் – www.emb-brasilia.gov.lk புதுடெல்லி இலங்கை உயர்ஸ்தானிகராலயம் – www.hc-newdelhi.gov.lk வெலிங்டன் இலங்கை உயர்ஸ்தானிகராலயம் – www.hc-wellington.gov.lk மாலே இலங்கை உயர்ஸ்தானிகராலயம் – www.hc-male.gov.lk பாரிஸ் இலங்கைத் தூதரகம் – www.emb-paris.gov.lk பிரிட்டோரியா இலங்கை உயர்ஸ்தானிகராலயம் – www.hc-pretoria.gov.lk ஒட்டாவா இலங்கை உயர்ஸ்தானிகராலயம் – www.hc-ottawa.gov.lk சென்னை இலங்கை துணை உயர்ஸ்தானிகராலயம் – www.hc-chennai.gov.lk மும்பை இலங்கை கொன்சியூலர் ஜெனரல் அலுவலகம் – www.cg-mumbai.gov.lk டொராண்டோ இலங்கை கொன்சியூலர் ஜெனரல் அலுவலகம் – www.cg-toronto.gov.lk மிலான் இலங்கை கொன்சியூலர் ஜெனரல் அலுவலகம் – www.cg-milan.gov.lk
ஷாங்காய் இலங்கை கொன்சியூலர் ஜெனரல் அலுவலகம் – www.cg-shanghai.gov.lk டோக்கியோ இலங்கைத் தூதரகம் – www.emb-tokyo.gov.lk லண்டன் இலங்கை உயர்ஸ்தானிகராலயம் – www.hc-london.gov.lk ரியாத் இலங்கைத் தூதரகம் – www.emb-riyadh.gov.lk பெர்லின் இலங்கைத் தூதரகம் – www.emb-berlin.gov.lk சியோல் இலங்கைத் தூதரகம் – www.emb-seoul.gov.lk தெஹ்ரான் இலங்கைத் தூதரகம் – www.emb-tehran.gov.lk மொஸ்கோ இலங்கைத் தூதரகம் – www.emb-moscow.gov.lk அபுதாபி இலங்கைத் தூதரகம் – www.emb-abudhabi.gov.lk
தோஹா இலங்கைத் தூதரகம் – www.emb-doha.gov.lk டுபாய் இலங்கை கொன்சியூலர் ஜெனரல் அலுவலகம் – www.cg-dubai.gov.lk பெய்ஜிங் இலங்கைத் தூதரகம் – www.emb-beijing.gov.lk வாஷிங்டன் டி.சி. இலங்கைத் தூதரகம் – www.emb-washington.gov.lk வியன்னா இலங்கைத் தூதரகம் – www.emb-vienna.gov.lk பாங்கொக் இலங்கைத் தூதரகம் – www.emb-bangkok.gov.lk ரோம் இலங்கைத் தூதரகம் – www.emb-rome.gov.lk குவைத் இலங்கைத் தூதரகம் – www.emb-kuwait.gov.lk மஸ்கட் இலங்கைத் தூதரகம் – www.emb-muscat.gov.lk பெய்ரூட் இலங்கைத் தூதரகம் – www.emb-beirut.gov.lk பிரஸ்ஸல்ஸ் இலங்கைத் தூதரகம் – www.emb-brussels.gov.lk கன்பரா இலங்கை உயர்ஸ்தானிகராலயம் – www.hc-canberra.gov.lk கோலாலம்பூர் இலங்கை உயர்ஸ்தானிகராலயம் – www.hc-kualalumpur.gov.lk ஜெனீவா இலங்கை நிரந்தரப் பிரதிநிதித்துவம் – www.un-geneva.gov.lk நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கை நிரந்தரப் பிரதிநிதித்துவம் – www.un-newyork.gov.lk பாலஸ்தீனத்தின் ரமல்லா இலங்கை பிரதிநிதித்துவ அலுவலகம் – www.rep-ramallah.gov.lk
மேலும், அம்மான், ஸ்டொக்ஹோம், மணிலா, டெல் அவிவ், ஜகார்த்தா, நைரோபி, சிங்கப்பூர், இஸ்லாமாபாத், யாங்கூன், அங்காரா, ஹனோய், காத்மண்டு, மனாமா, டாக்கா, கராச்சி, அடிஸ் அபாபா, ஹவானா, விக்டோரியா, குவாங்சோ, லொஸ் ஏஞ்சல்ஸ், மெல்போர்ன் மற்றும் ஜெத்தா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் மற்றும் நகரங்களில் உள்ள இலங்கைத் தூதரகங்களும் இந்த புதிய இணையத்தள வலையமைப்பில் இணைக்கப்பட்டுள்ளன.
இந்த நடவடிக்கையின் மூலம் வெளிநாடுகளில் வசிக்கும் மற்றும் பணிபுரியும் இலங்கையர்கள் மட்டுமன்றி, வெளிநாட்டு நண்பர்களும் தங்களது பிரதேசத்துக்குரிய இலங்கைத் தூதரகங்களிடமிருந்து நம்பகமான மற்றும் புதுப்பிக்கப்பட்ட தகவல்களை நேரடியாகப் பெற்றுக்கொள்ள முடியும் என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.









