இன்று (01) நண்பகல் 12.10 மணியளவில் இலங்கையின் 8 நகரங்களுக்கு மேலாக சூரியன் நேரடியாக உச்சியில் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி, இன்று சூரியன் உச்சியில் இருக்கும் இடங்களுக்கு அருகிலுள்ள பகுதிகளாக கற்பிட்டி, தலாவ, சிங்காரகம, கல்கடவல, நாச்சதுவ, படிகரமடுவ, கோமரங்கல்ல மற்றும் வெருகல் ஆகியவை குறிப்பிடப்பட்டுள்ளன.
சூரியனின் தோற்றப்பூர்வமான தெற்கு நோக்கிய நகர்வு காரணமாக, செப்டெம்பர் 07ஆம் திகதி வரை இலங்கையின் அட்சரேகைகளுக்கு மேலாக சூரியன் நேரடியாகக் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.








