முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில், தனியார் ஊடக நிறுவனமொன்றின் ஒளிப்பதிவாளர் ஒருவர் கொம்பனித்தெரு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று (30) கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இடம்பெற்ற வழக்கு விசாரணைகளின் பின்னர், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நீதிமன்ற வளாகத்திலிருந்து வெளியே வந்தபோது, அங்கிருந்த தனியார் ஊடக நிறுவனமொன்றின் ஒளிப்பதிவாளரால் அவரது பாதுகாப்பு அதிகாரி தாக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
தாக்குதலில் காயமடைந்த பாதுகாப்பு அதிகாரி சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்காக குறித்த ஒளிப்பதிவாளர் கொம்பனித்தெரு பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டதுடன், பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை, சம்பவம் தொடர்பில் சுயாதீனமானதும் சுதந்திரமானதுமான விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.
இன்று (1) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே ஐக்கிய தேசியக் கட்சி இதனைத் தெரிவித்துள்ளது.








