ஆப்கானிஸ்தானில் இன்று (1) காலை 5.3 மெக்னிடியூட் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக இந்திய தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்திய நேரப்படி காலை 6.59 மணியளவில் பதிவான இந்த நிலநடுக்கம், பூமிக்கு அடியில் 126 கிலோமீற்றர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது.
இதன் மையப்புள்ளி, ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இருந்து வடமேற்குத் திசையில் சுமார் 165 கிலோமீற்றர் தொலைவில் அமைந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேதங்கள் அல்லது உயிரிழப்புகள் தொடர்பான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.








