யெமனில் ஹூதி அமைப்பின் இராணுவத் திறன்களை இலக்காகக் கொண்டு துல்லியமான இராணுவ நடவடிக்கையை முன்னெடுத்துள்ளதாக சவுதி தலைமையிலான கூட்டணி அறிவித்துள்ளது.
கூட்டணியின் பேச்சாளர் துர்கி அல்-மால்கி, பாலிஸ்டிக் ஏவுகணைகளை சேமித்து வைக்கும் சுரங்கப் பாதைகள் மற்றும் ஏவுகணைகளைத் தயாரிக்கும் பணிமனைகள் உள்ளிட்டவற்றைத் தமது படைகள் அழித்துள்ளதாக X தளத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்துள்ளார்.
மேலும், யெமனின் சனா, ஹுதைதா, அம்ரான் மற்றும் சஅதா ஆகிய மாகாணங்களில் 60 இராணுவ இலக்குகளை கூட்டணிப் படைகள் அழித்துள்ளதாகவும் அவர் மற்றொரு பதிவில் குறிப்பிட்டுள்ளார்.






