பஹ்ரைனில் நிலவிய பாதுகாப்பு அச்சுறுத்தல் நீங்கியுள்ளதாக அந் நாட்டின் உள்துறை அமைச்சு அறிவித்துள்ளது.
இது தொடர்பில் இரண்டாவது முறையாகப் பாதுகாப்பு எச்சரிக்கை நீக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ள அமைச்சு, ஆபத்து நீங்கிவிட்டதாகவும் தெரிவித்துள்ளது.
எனினும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்ந்து அமுலில் இருக்கும் என்றும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, பஹ்ரைன் மீது ஈரான் தொடர்ந்து தாக்குதல்களை முன்னெடுத்து வருவதாக பஹ்ரைன் பாதுகாப்புப் படையின் தலைமைத் தளபதி முன்னதாகக் குற்றஞ்சாட்டியிருந்தார்.
அத்துடன், இன்று (18) முன்னெடுக்கப்பட்ட பல வான்வழித் தாக்குதல்களைத் தமது படையினர் இடைமறித்துள்ளதாகவும் பஹ்ரைன் பாதுகாப்புப் படை தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.








