யெமனின் சில பகுதிகளில் இடம்பெற்று வரும் மோதல்கள் காரணமாக பல்லாயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்துள்ளதுடன், உணவு விநியோகமும் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகளின் உலக உணவுத் திட்டம் (WFP) தெரிவித்துள்ளது.
இதனால், குறித்த பகுதிகளில் உள்ள நான்கு குடும்பங்களில் மூன்று குடும்பங்கள் போதிய உணவின்றி தவித்து வருவதாக WFP தெரிவித்துள்ளது.







