ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவினால் மூன்று புதிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களுக்கான நியமனக் கடிதங்கள் இன்று (23) ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவினால் உத்தியோகபூர்வமாக வழங்கப்பட்டுள்ளன.
இதன்படி, யாழ்ப்பாண மாவட்ட நீதிபதியாக தற்போது பணியாற்றும் பெருமாள் சிவகுமார், நீதிச்சேவை ஆணைக்குழுவின் சிரேஷ்ட உதவிச் செயலாளராக பணியாற்றும் ஆனந்தி கனகரத்தினம் மற்றும் கொழும்பு மாவட்ட நீதிபதியாக தற்போது பணியாற்றும் ஞானேஷ லலித் கன்னங்கர ஆகியோர் புதிய மேல் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஜனாதிபதி ஊடகப் பிரிவின் தகவலின்படி, மூவரும் நீதிச்சேவையின் விசேட தர அதிகாரிகளாக உள்ளனர்.
மேல் நீதிமன்ற நீதிபதிகளாக பதவி உயர்த்தப்பட்டதைத் தொடர்ந்து, அவர்களுக்கான நியமனக் கடிதங்களை ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க வழங்கியுள்ளார்.








