அநுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு ரூ.153 மில்லியன் மதிப்பிலான நவீன மெமோகிராஃபி (Mammography) இயந்திரம் வழங்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் மார்பகப் புற்றுநோய் மற்றும் மார்பகத்தில் ஏற்படும் பிற அசாதாரணங்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிவதற்கான பரிசோதனைகளை விரைவாக மேற்கொள்ள முடியும். மேலும், மெமோகிராஃபி பரிசோதனைக்காக காத்திருப்போர் எண்ணிக்கையையும் குறைக்க முடியும்.
இந்தத் திட்டத்தின் கீழ், கொழும்பு தேசிய வைத்தியசாலை, காலி கராப்பிட்டிய தேசிய வைத்தியசாலை, கண்டி தேசிய வைத்தியசாலை, அநுராதபுரம் போதனா வைத்தியசாலை மற்றும் அபேக்ஷா வைத்தியசாலை ஆகிய ஐந்து வைத்தியசாலைகளுக்கு தலா ரூ.153 மில்லியன் பெறுமதியான நவீன மெமோகிராஃபி இயந்திரங்கள் வழங்கப்படுகின்றன.
இந்த ஐந்து இயந்திரங்களின் மொத்த பெறுமதி ரூ.765 மில்லியன் ஆகும்.
சுகாதார அமைச்சின் சுகாதார அமைப்பு மேம்பாட்டுத் திட்டம் (HSEP) மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) ஆகியவை இதற்கான நிதியுதவியை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.








