உலக சந்தையில் கச்சா எண்ணெயின் விலை மீண்டும் அதிகரித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஈரானுக்கு எதிராக ‘பொருளாதாரப் போர்’ தொடுக்கப்போவதாக எச்சரித்துள்ளதுடன், ஐக்கிய அரபு இராச்சியம் ஈரானுடனான வர்த்தகத்தை இடைநிறுத்த நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், கச்சா எண்ணெய் விலை உயர்வடைந்துள்ளது.
இதன்படி, ஒரு பீப்பாய் பிரென்ட் கச்சா எண்ணெயின் விலை 94 அமெரிக்க டொலராகவும், WTI கச்சா எண்ணெயின் விலை 87 டொலராகவும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.









