சவுதி அரேபிய ஆதரவு பெற்ற யெமன் அரசுப் படைகள், ஹூதிகளின் கட்டுப்பாட்டிலுள்ள தலைநகர் சனாவை இலக்காகக் கொண்டு வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளன. இதனால் மேலும் பொதுமக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.
ஈரான் தொடர்பில் விரைவில் முடிவெடுக்கவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். “அது எளிதான வழியாக இருக்கலாம் அல்லது கடினமான வழியாக இருக்கலாம்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஓமான் கடற்பரப்புக்கு அப்பால் சனிக்கிழமை கச்சா எண்ணெய் கப்பல் ஒன்று தாக்கப்பட்டுள்ளதாக பிரித்தானிய கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் அமைப்பு தெரிவித்துள்ளது. இரண்டு நாட்களில் அப்பகுதியில் கப்பல் மீது நடத்தப்பட்ட மூன்றாவது தாக்குதல் இதுவாகும்.
இஸ்ரேலியப் படைகள் காஸா மற்றும் தெற்கு லெபனானில் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகின்றன. காஸாவில் இடம்பெற்ற தாக்குதல்களில் குறைந்தது 8 பேர் கொல்லப்பட்டதுடன், 3 பேர் காயமடைந்துள்ளனர்.







