மதுராந்தகம் சட்டப்பேரவைத் தொகுதியில் மரகதம் குமரவேலும், தாராபுரம் தொகுதியில் சத்யபாமாவும் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர்.
இரு தொகுதிகளிலும் திமுக வேட்பாளர்களை விட அதிக வாக்குகளைப் பெற்று தவெக வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.
மதுராந்தகம் தொகுதி
மதுராந்தகம் தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட்ட மரகதம் குமரவேல் 61,470 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். திமுக வேட்பாளர் பரந்தாமன் 43,916 வாக்குகளைப் பெற்றார்.
இதன் மூலம் மரகதம் குமரவேல் 17,554 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதிமுக வேட்பாளர் கணிதா சம்பத் 38,770 வாக்குகளைப் பெற்றார்.
இத்தொகுதியில் மொத்தம் 2,13,788 வாக்காளர்கள் உள்ள நிலையில், 1,84,413 பேர் வாக்களித்துள்ளனர். இதன்படி 86.26 சதவீத வாக்குகள் பதிவாகின.
தாராபுரம் தொகுதி
தாராபுரம் தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட்ட சத்யபாமா 62,596 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். திமுக வேட்பாளர் சுகன்யா 52,400 வாக்குகளைப் பெற்றார்.
இதன் மூலம் சத்யபாமா 10,196 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதிமுக வேட்பாளர் பானுமதி 41,078 வாக்குகளைப் பெற்றார்.
இத்தொகுதியில் மொத்தம் 2,23,306 வாக்காளர்களில் 1,79,314 பேர் வாக்களித்துள்ளனர். இதன்படி 80.30 சதவீத வாக்குகள் பதிவாகின.
தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்
மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளிலும் தவெக வேட்பாளர்கள் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, அக்கட்சித் தொண்டர்கள் உற்சாகமாகக் கொண்டாடினர்.
இந்த வெற்றியைத் தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அமைச்சர்கள், கடந்த நான்கு மாத கால ஆட்சிக்குக் கிடைத்த வெற்றி எனக் குறிப்பிட்டுள்ளனர்.








