மலையகத்தில் தொடரும் சீரற்ற வானிலை காரணமாக, ஹட்டன் மற்றும் நுவரெலியா கல்வி வலயங்களுக்குட்பட்ட அனைத்து பாடசாலைகளுக்கும் இன்று (25) விடுமுறை வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மத்திய மாகாண கல்விச் செயலாளர் தெரிவித்துள்ளார்.
நேற்று காலை முதல் பெய்து வரும் பலத்த மழை காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, மத்திய மாகாணத்தின் ஏனைய கல்வி வலயங்களுக்குட்பட்ட பாடசாலைகளை இன்று நடத்துவதா, இல்லையா என்பது தொடர்பான தீர்மானத்தை அந்தந்த கல்வி வலய அதிகாரிகள் மேற்கொள்ள முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.








