மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளில் பெய்து வரும் கடும் மழை காரணமாக, பொகவந்தலாவ பகுதியில் உள்ள பல தாழ்நிலப் பகுதிகளில் அமைந்துள்ள வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
மேலும், தொடர்ச்சியாக பெய்து வரும் பலத்த மழையால் போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதனால், ஹட்டன் – நுவரெலியா மற்றும் ஹட்டன் – கொழும்பு பிரதான வீதிகளில் வாகனங்களைச் செலுத்தும் போது மிகுந்த அவதானத்துடனும், எச்சரிக்கையுடனும் செயற்படுமாறு பொலிஸார் சாரதிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.








