2027ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்ட மூலத்தின் குழுநிலை விவாதத்தின் முதல் நாளான நேற்று (21), விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்ட ஜனாதிபதி மற்றும் பிரதமர் அலுவலகங்கள் உள்ளிட்ட 21 விசேட செலவின அலகுகளுக்கான செலவுத் தலைப்புகள், பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பின்றியும் திருத்தங்களின்றியும் நிறைவேற்றப்பட்டன.
இதற்கமைய, ஜனாதிபதி அலுவலகம், பிரதமர் அலுவலகம், உயர் நீதிமன்றங்களின் நீதிபதிகள், அமைச்சரவை அலுவலகம், அரசாங்க சேவை ஆணைக்குழு அலுவலகம், நீதிச் சேவை ஆணைக்குழு, தேசிய பொலிஸ் ஆணைக்குழு, நிர்வாக மேன்முறையீட்டு நியாயச்சபை, இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு, நிதி ஆணைக்குழு அலுவலகம் மற்றும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு ஆகியவற்றின் செலவுத் தலைப்புகள் நிறைவேற்றப்பட்டன.
அத்துடன், பாராளுமன்றம், பாராளுமன்ற சபை முதல்வரின் அலுவலகம், பாராளுமன்ற அரசாங்கக் கட்சியின் முதற்கோலாசானின் அலுவலகம், பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகம், தேர்தல்கள் ஆணைக்குழு, தேசிய கணக்காய்வு அலுவலகம், நிர்வாகத்திற்கான பாராளுமன்ற ஆணையாளர் அலுவலகம், கணக்காய்வு சேவை ஆணைக்குழு, தேசிய பெறுகை ஆணைக்குழு மற்றும் எல்லை நிர்ணய ஆணைக்குழு ஆகியவற்றின் செலவுத் தலைப்புகளும் இவ்வாறு நிறைவேற்றப்பட்டன.








