பல்கலைக்கழக பாடநெறிகளைக் கைவிட்டு வெளியேறும் ஆண் மாணவர்களில் 70% முதல் 80% வரையானோர் ஏதேனும் ஒரு போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் என பேராசிரியர் அமில இசுரு தெரிவித்துள்ளார்.
பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் போதைப்பொருள் பாவனை தொடர்பான ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து போதைப்பொருளைப் பயன்படுத்துவதற்கு, அதனால் கிடைக்கும் மகிழ்ச்சி மட்டுமன்றி, போதைப்பொருள் பயன்பாட்டை நிறுத்தும்போது ஏற்படும் திரும்பப் பெறல் அறிகுறிகளை கட்டுப்படுத்த வேண்டிய தேவை முக்கிய காரணமாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், பாடசாலை மற்றும் பல்கலைக்கழக மாணவர்களை போதைப்பொருளுக்கு அடிமையாக்க போதைப்பொருள் வியாபாரிகள் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் பேராசிரியர் எச்சரித்துள்ளார்.









