நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு விதிக்கப்பட்ட சிறைத்தண்டனையின் எஞ்சிய காலத்தை அமுல்படுத்துமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (05) உத்தரவிட்டுள்ளது.
ஞானசார தேரர் இன்று சிறைச்சாலை அதிகாரிகளால் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சிறைத்தண்டனையை அமுல்படுத்துவதற்காக அவரை கைது செய்ய முன்னதாக திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.
நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்களை பரிசீலித்த நீதிபதிகள் குழாம், ஞானசார தேரருக்கு விதிக்கப்பட்ட சிறைத்தண்டனையின் எஞ்சிய காலத்தை அமுல்படுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்திற்கு உத்தரவிட்டது.
நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் ஞானசார தேரர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டிருந்தார்.







