கட்டுகஸ்தோட்டை நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் மேற்கொள்ளப்படவுள்ள அத்தியாவசிய பராமரிப்புப் பணிகள் காரணமாக, சில பகுதிகளில் 48 மணிநேர நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
இதன்படி, நாளை (6) முற்பகல் 9 மணி முதல் எதிர்வரும் 8ஆம் திகதி முற்பகல் 9 மணி வரை உடுவாவல, ரஜபிஹில்ல மற்றும் கோனிகொட ஆகிய பகுதிகளில் நீர் விநியோகம் இடைநிறுத்தப்படவுள்ளது.
எனவே, பொதுமக்கள் குறித்த காலப்பகுதிக்குத் தேவையான நீரை முன்கூட்டியே சேமித்து, சிக்கனமாகப் பயன்படுத்துமாறு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை கேட்டுக்கொண்டுள்ளது.








