சபாநாயகர் தலைமையில் இன்றைய (11) பாராளுமன்ற அமர்வு தற்போது ஆரம்பமாகியுள்ளது.
இன்றைய பாராளுமன்ற நடவடிக்கைகள் பின்வருமாறு இடம்பெறவுள்ளன:
மு.ப. 09.30 – 10.00
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் 22(6) வரையிலான ஏற்பாடுகளுக்கு அமைய பாராளுமன்ற அலுவல்கள்.
மு.ப. 10.00 – 11.00
வாய்மூல விடைக்கான வினாக்கள்.
மு.ப. 11.00 – 11.30
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்.
மு.ப. 11.30 – பி.ப. 5.00
பின்வரும் தனியார் உறுப்பினர் பிரேரணைகள் முன்வைக்கப்படவுள்ளன:
- பெற்றோலியம், எரிபொருள் மற்றும் நீர் தொடர்பான கைத்தொழில்களை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் ஒழுங்குபடுத்தலின் கீழ் கொண்டு வருதல் – நலீன் பண்டார ஜயமஹ.
- இலங்கையில் குழந்தை பிறப்பு எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக குடும்பங்களுக்கு ஊக்குவிப்புத் தொகை வழங்குதல் – அஜித் பி. பெரேரா.
- தியகம வனத்தைப் பாதுகாத்தல் – கலாநிதி ஹர்ஷ த சில்வா.
- பிரிவென ஆசிரியர்களின் ஓய்வூதியத்திற்காக அவர்களின் ஊதியத்திலிருந்து கூடுதலாக 6 சதவீதத் தொகையை அறவிடுவதை நிறுத்துதல் – சுஜீவ திசாநாயக்க.
- மலைப்பாங்கான பிரதேசங்களில் உணவுப் பயிர்களைப் பயிரிடுதல் – நந்த பண்டார.
- கித்துள் கைத்தொழிற்றுறையை முன்னேற்றுதல் – ரீ.கே. ஜயசுந்தர.
- இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் மருத்துவ பீடமொன்றை நிறுவுதல் – கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்.
பி.ப. 5.00 – 5.30
ஒத்திவைப்பு வேளையின் போதான வினாக்கள்.
இன்றைய பாராளுமன்ற நடவடிக்கைகளின் நேரடி ஒளிபரப்பை கீழே காணலாம்.







