ஹோர்முஸ் நீரிணையின் நுழைவுப் பகுதியில் அமெரிக்காவால் இயக்கப்பட்ட கடல் மேற்பரப்பு ட்ரோன் ஒன்றைத் தமது கடற்படை தாக்கியதாக ஈரானின் புரட்சிகர காவல்படை தெரிவித்துள்ளது.
பாய்மரப் படகை ஒத்த வடிவமைப்பைக் கொண்ட இந்த ட்ரோனைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட “ஆக்கிரமிப்பு நடவடிக்கையை முறியடித்ததாக” ஈரான் தெரிவித்துள்ளது.
எனினும், ஈரானின் இந்தக் கூற்று தொடர்பில் அமெரிக்கா இதுவரை எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை.







