அமெரிக்காவில் டீசலின் சராசரி விலை வரலாற்றில் முதன்முறையாக ஒரு கலனுக்கு 6 அமெரிக்க டொலரைத் தாண்டியுள்ளது.
விலை கண்காணிப்பு நிறுவனமான GasBuddy வெளியிட்ட தரவுகளை மேற்கோள்காட்டி ரொய்ட்டர்ஸ் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.
ஈரானுடனான மோதல் மற்றும் ரஷ்யாவின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீது உக்ரைன் நடத்திய தாக்குதல்களால் ஏற்பட்ட எண்ணெய் விநியோகத் தடைகளுக்கு மத்தியில் டீசல் விலை இந்த அளவுக்கு அதிகரித்துள்ளது.
இதற்கு முன்னர் கடந்த வாரம் ஒரு கலன் டீசலின் சராசரி விலை 5.85 அமெரிக்க டொலராக பதிவாகியிருந்த நிலையில், தற்போது அந்த சாதனையையும் முறியடித்துள்ளது.








