கொழும்புக்கும் சவூதி அரேபியாவின் ரியாத் நகருக்கும் இடையிலான அனைத்து விமான சேவைகளையும் ஒக்டோபர் 18ஆம் திகதி வரை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நடவடிக்கை எடுத்துள்ளது.
எனினும், சவூதி அரேபியாவின் தம்மாம் நகருக்கான விமான சேவைகள் திட்டமிட்டபடி தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
ரியாத் நகருக்கான விமான சேவைகள், வர்த்தக விமானப் போக்குவரத்தை முன்னெடுப்பதற்குப் பாதுகாப்பான சூழல் நிலவுவதாக உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் மீண்டும் ஆரம்பிக்கப்படும் எனவும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் குறிப்பிட்டுள்ளது.








