களுத்துறை நகரம் மற்றும் அதனை அண்மித்த சில பகுதிகளில் நாளை மறுதினம் (08) எட்டு மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.
கெத்தேஹேன நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் மேற்கொள்ளப்படவுள்ள அத்தியாவசிய பராமரிப்புப் பணிகள் காரணமாக இந்த நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.








