2026 ஒகஸ்ட் மாதத்திற்குரிய 70 வயதிற்கு மேற்பட்ட முதியோர்களுக்கான ‘அஸ்வெசும’ முதியோர் கொடுப்பனவு 03.09.2026 உரிய பயனாளிகளின் அஸ்வெசும வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படவுள்ளது.
இதற்கமைய, அஸ்வெசும நலன்புரிப் நன்மைகள் செலுத்தும் திட்டத்தின் முதற்கட்டத்தின் கீழ் 70 வயதிற்கு மேற்பட்ட 618,352 முதியோர்களுக்காக 3,091,760,000 ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
மேலும், இதன் இரண்டாம் கட்டத்தின் கீழ் 70 வயதிற்கு மேற்பட்ட 78,260 முதியோர்களுக்காக 391,300,000 ரூபா நிதி வைப்பிலிடப்படவுள்ளது.
உரிய பயனாளிகள் 03.09.2026 முதல் தங்களுக்கான முதியோர் கொடுப்பனவை அஸ்வெசும வங்கிக் கணக்குகள் ஊடாகப் பெற்றுக்கொள்ள முடியும் என நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.









