ஈரான் ஆதரவு ஹூதி கிளர்ச்சியாளர்கள் மீது நடத்தப்பட்ட ஆளில்லா விமானத் தாக்குதல்கள் தொடர்பான காணொளிகளை சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட யெமன் அரசின் ஆயுதப்படைகள் வெளியிட்டுள்ளன.
யெமன் ஆயுதப்படைகளின் ஊடக மையம் ‘எக்ஸ்’ தளத்தில் மூன்று காணொளிகளை வெளியிட்டுள்ளது. அவற்றில் ஆறாவது மற்றும் ஏழாவது இராணுவ பிராந்தியங்களைச் சேர்ந்த படையினர், “ஹூதி போராளிகளின் குழுக்கள்” மற்றும் “ஹூதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள நிலைகள்” மீது தாக்குதல் நடத்துவதை காண்பிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு காணொளியில் இடம்பெற்றுள்ள தாக்குதல், முன்கள மாகாணமான மாரிப் பகுதியில் உள்ள ஹிலான் பகுதியில் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏனைய இரண்டு காணொளிகளில் இடம்பெற்ற தாக்குதல்கள் நடத்தப்பட்ட இடங்கள் தொடர்பில் எந்தத் தகவலும் வெளியிடப்படவில்லை.
செய்தி மூலம்: அல்ஜசீரா









