யெமனின் தாயிஸ் (Taiz) நகரின் மேற்குப் பகுதியில் ஹூதி கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதல் முறியடிக்கப்பட்டுள்ளதாக யெமன் அரசாங்கப் படைகள் தெரிவித்துள்ளன.
சர்வதேச அங்கீகாரம் பெற்ற யெமன் அரசாங்கத்தின் ஆயுதப் படைகள் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நகரின் பழைய விமான நிலையம் மற்றும் மதராத் (Madarat) பகுதியைச் சுற்றியுள்ள இடங்களில் இன்று காலை முதல் மோதல்கள் இடம்பெற்றதாகவும், இதில் ஹூதி கிளர்ச்சியாளர்கள் உயிரிழப்புகளைச் சந்தித்ததுடன், அவர்களது இராணுவ உபகரணங்களும் இழக்கப்பட்டதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சவூதி அரேபியாவின் ஆதரவுடன் செயற்படும் யெமன் அரசாங்கப் படைகள், நகரின் மேற்கு, தெற்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் ஹூதி கிளர்ச்சியாளர்களின் போராளிகள், இராணுவ வாகனங்கள் மற்றும் ஏவுகணை ஏவுதளம் ஆகியவற்றை இலக்குவைத்து வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளன.
குறிப்பாக, ஜபல் ஹான் (Jabal Han) மற்றும் அல்-ஜனாத் (Al-Janad) பகுதிகளுக்கு அருகிலும் இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், நகரின் மேற்குப் பகுதியில் பறந்துகொண்டிருந்த ஹூதி கிளர்ச்சியாளர்களுக்குச் சொந்தமான ஆளில்லா விமானமொன்றையும் தமது வான் பாதுகாப்புப் படையினர் சுட்டு வீழ்த்தியுள்ளதாக யெமன் அரசாங்கப் படைகள் தெரிவித்துள்ளன.






