ஹல்துமுல்லை, சொரகுணே தபால் அலுவலகத்தில் பணியாற்றும் தபால்காரர் ஒருவர், கடமையில் இருந்தபோது மதுபானம் அருந்துவதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த தபால்காரரின் வீட்டில் பொலிஸார் மேற்கொண்ட சோதனையின்போது, விநியோகிக்கப்படாமல் தேக்கி வைக்கப்பட்டிருந்த 2,065 சாதாரண கடிதங்களும் 15 பதிவுத் தபால்களும் மீட்கப்பட்டுள்ளன.
குறித்த தபால்காரர் 2021ஆம் ஆண்டு முதல் கடிதங்களை விநியோகிக்கத் தவறியுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் பண்டாரவளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.







