யெமனின் ஹூதி கிளர்ச்சியாளர்கள் சவூதி அரேபியாவின் அல்-கர்ஜ் ஆளுநரகத்தை இலக்காகக் கொண்டு ஏவிய பாலிஸ்டிக் ஏவுகணையை யெமன் அரசுப் படையினர் இடைமறித்து அழித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சவூதி அரேபியா தலைமையிலான கூட்டணியின் பேச்சாளர் துர்கி அல்-மாலிக்கி இதனைத் தெரிவித்துள்ளார்.
சவூதி அரேபியாவின் தலைநகர் ரியாத்திலிருந்து தென்கிழக்கே சுமார் 80 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ள அல்-கர்ஜ் பகுதியில், சவூதி மற்றும் அமெரிக்கப் படையினர் இணைந்து செயல்படும் பிரின்ஸ் சுல்தான் விமானப்படைத் தளம் அமைந்துள்ளது.
இதற்கிடையில், சனிக்கிழமை (10) கிங் காலித் விமானப்படைத் தளம் மீது நடத்தப்பட்ட உயிரிழப்புகளை ஏற்படுத்திய தாக்குதலுக்கும் ஈரான் ஆதரவு பெற்ற ஹூதி கிளர்ச்சியாளர்களே காரணம் என யெமன் அரசுப் படையினர் குற்றஞ்சாட்டியிருந்தனர்.
இந்நிலையில், அல்-கர்ஜ் நோக்கி ஏவப்பட்ட ஏவுகணை இடைமறித்து அழிக்கப்பட்டதாகக் கூட்டணியின் பேச்சாளர் எக்ஸ் சமூக ஊடகத்தில் வெளியிட்ட அறிவிப்பு, பிராந்தியத்தில் நிலவும் பாதுகாப்புப் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.







