வியட்நாம் சோசலிசக் குடியரசின் 81ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, இலங்கைக்கான வியட்நாம் தூதுவர் திரின் தான் டிம் தலைமையில் கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் நேற்று (24) சிறப்பு வரவேற்பு நிகழ்வு நடைபெற்றது.
நிகழ்வின் பிரதம அதிதியாக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார கலந்து கொண்டார்.
இந்நிகழ்வில் இராஜதந்திரத் தூதுக்குழுக்களின் உறுப்பினர்கள், அமைச்சர்கள், பிரதி சபாநாயகர் கலாநிதி ரிஸ்வி சாலி, மேல் மாகாண ஆளுநர் ஹனீப் யூசுப் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள், அழைப்பாளர்கள் மற்றும் வியட்நாமின் நலன் விரும்பிகள் பலரும் கலந்துகொண்டனர்.
வியட்நாமின் கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன் இடம்பெற்ற இந்த வரவேற்பு நிகழ்வு, வியட்நாமிய பாரம்பரிய உணவுகள் அடங்கிய சிறப்பு இரவு விருந்துடன் நிறைவடைந்தமை குறிப்பிடத்தக்கது.
மொஹமட் ரஸூல்தீன்















