வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் இன்று (28) ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 81ஆவது கூட்டத்தொடரில் இலங்கையின் தேசிய உரையை நிகழ்த்தவுள்ளார்.
ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் இம்முறை கூட்டத்தொடரின் “நம்பிக்கையை மீட்டெடுத்தல், மாற்றங்களை முகாமை செய்தல், அனைவருக்கும் பலனளிக்கும் ஐக்கிய நாடுகள் சபை” என்ற கருப்பொருளுக்கு அமைய அமைச்சர் தனது உரையை நிகழ்த்தவுள்ளதாக வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும், பொதுச்சபைக் கூட்டத்தொடருக்கு இணையாக ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் அந்தோனியோ குத்தேரஸ், ஐ.நா.வின் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் பல நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களுடனும் அமைச்சர் விஜித ஹேரத் கலந்துரையாடல்களை மேற்கொள்ளவுள்ளார்.








