செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத் துறையில் மேற்கொண்ட தொடர்ச்சியான முதலீடுகள் மற்றும் புத்தாக்கக் கண்டுபிடிப்புகளின் மூலம், Interbrand நிறுவனத்தின் 2026ஆம் ஆண்டுக்கான ‘உலகின் சிறந்த வர்த்தக நாமங்கள்’ (Best Global Brands) தரவரிசையில் Samsung Electronics நிறுவனம் தொடர்ந்து ஏழாவது ஆண்டாக 5ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.
இதற்கமைய, Samsung நிறுவனத்தின் வர்த்தக நாம மதிப்பு 105.2 பில்லியன் அமெரிக்க டொலர்களாக உயர்ந்துள்ளது.
குறிப்பாக, 2020ஆம் ஆண்டு முதல் உலகின் முன்னணி ஐந்து வர்த்தக நாமங்களுக்குள் தனது இடத்தைத் தொடர்ந்து தக்கவைத்துள்ள ஒரே ஆசிய நிறுவனம் என்ற பெருமையையும் Samsung பெற்றுள்ளது.
செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தில் Samsung மேற்கொண்டுவரும் தொடர்ச்சியான முதலீடுகள் மற்றும் வளர்ச்சிக்கு இந்த அங்கீகாரம் சான்றாக அமைந்துள்ளது. குறிப்பாக, AI குறைக்கடத்திகளின் மேம்பாடு மற்றும் தனது தயாரிப்புகளில் செயற்கை நுண்ணறிவு அம்சங்களை ஒருங்கிணைத்தமை ஆகியவை இந்தச் சாதனைக்கான முக்கிய காரணங்களாகக் குறிப்பிடப்படுகின்றன.
அத்துடன், ‘One Samsung’ என்ற அணுகுமுறையின் கீழ், வாடிக்கையாளர்களின் தேவைகளுக்கு முன்னுரிமை அளித்து, பல்வேறு தயாரிப்புகள் மற்றும் சேவைகளை ஒருங்கிணைக்கும் நிறுவனத்தின் வர்த்தக நாம உத்தியையும் Interbrand பாராட்டியுள்ளது.
இந்தச் சாதனை தொடர்பில் கருத்துத் தெரிவித்த Samsung ஸ்ரீலங்கா மற்றும் மாலைத்தீவுகளுக்கான முகாமைத்துவப் பணிப்பாளர் டோங்கயூன் லீ, தொடர்ந்து ஏழாவது ஆண்டாக உலகின் முதல் ஐந்து வர்த்தக நாமங்களில் ஒன்றாகத் திகழ்வது நிறுவனத்தின் புத்தாக்க முயற்சிகளுக்கும் வாடிக்கையாளர் அனுபவங்களுக்கும் கிடைத்த முக்கிய அங்கீகாரம் எனத் தெரிவித்துள்ளார்.
செயற்கை நுண்ணறிவு, இணைக்கப்பட்ட தொழில்நுட்பங்கள் மற்றும் தயாரிப்பு மேம்பாடு ஆகியவற்றில் மேற்கொள்ளப்படும் முதலீடுகள், மக்களின் அன்றாட வாழ்க்கையில் தொழில்நுட்பத்தை மேலும் பயனுள்ளதாக மாற்றுவதற்கான நிறுவனத்தின் அர்ப்பணிப்பைப் பிரதிபலிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இலங்கை வாடிக்கையாளர்களின் மாறிவரும் தேவைகளுக்கு ஏற்ப தயாரிப்புகளையும் சேவைகளையும் தொடர்ந்து மேம்படுத்துவதன் முக்கியத்துவத்தை இந்த அங்கீகாரம் மீண்டும் உறுதிப்படுத்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்திற்கான உலகளாவிய தேவை அதிகரித்துள்ள நிலையில், அதற்குத் தேவையான உயர்மதிப்பு நினைவகச் சில்லுகளை (Memory Chips) விநியோகிப்பதன் மூலம் குறைக்கடத்தித் துறையில் Samsung தனது நிலையை மேலும் வலுப்படுத்தியுள்ளது.
தொழில்நுட்பத் துறையில் முதன்முறையாக HBM4 ரக நினைவகச் சில்லுகளைப் பெருமளவில் உற்பத்தி செய்து சந்தைப்படுத்தியதன் மூலம் Samsung மற்றுமொரு தொழில்நுட்ப மைல்கல்லையும் எட்டியுள்ளது.
அதேவேளை, Samsung நிறுவனத்தின் DX (Device Experience) பிரிவு, ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசிகள், தொலைக்காட்சிகள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு சாதனங்களில் செயற்கை நுண்ணறிவு அம்சங்களையும் தடையற்ற இணைப்பு வசதிகளையும் அறிமுகப்படுத்தி வருகிறது.
இதன் தொடர்ச்சியாக, Galaxy Z Fold8 கையடக்கத் தொலைபேசி புதிய வடிவமைப்பு மற்றும் 4:3 திரை அமைப்புடன் மடிக்கக்கூடிய கையடக்கத் தொலைபேசிகளின் தொழில்நுட்பத்தில் புதிய முன்னேற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிறுவனங்களின் நிதிச் செயல்திறன், வாடிக்கையாளர்களின் கொள்முதல் தீர்மானங்களில் வர்த்தக நாமத்தின் செல்வாக்கு மற்றும் ஒட்டுமொத்தப் போட்டித்திறன் ஆகியவற்றின் அடிப்படையில் Interbrand நிறுவனம் ஆண்டுதோறும் உலகளாவிய வர்த்தக நாமங்களை மதிப்பீடு செய்கிறது.
மேலும், வர்த்தக நாம உத்தி, வாடிக்கையாளர் புரிதல், தனித்துவமான அடையாளம், வாடிக்கையாளர் ஈடுபாடு, நிலைத்தன்மை மற்றும் நம்பிக்கை உள்ளிட்ட பல்வேறு காரணிகளும் இந்த மதிப்பீட்டில் கருத்தில் கொள்ளப்படுகின்றன.








