ய்வுபெற்ற பிரதி மதுவரி ஆணையாளர் சன்ன ஜயநாத் அல்விஸ் மற்றும் மாத்தறை மதுவரி நிலையத்தின் மதுவரி கோப்ரல் சம்பத் ரணசிங்க ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த இருவரும் நேற்று (05) இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மதுவரித் திணைக்களத்தின் களுத்துறை மதுவரி அதிகாரி மற்றும் அளுத்கம மதுவரி உற்பத்தி தொடர்பான அதிகாரி ஆகிய பதவிகளில் பதில் கடமையாற்றிய காலப்பகுதியில், தனது மேற்பார்வையின் கீழ் இருந்த சட்டப்பூர்வ உரிமம் பெற்ற நிறுவனமொன்றின் கணக்குகளிலிருந்து சட்டவிரோதமாக வழங்கப்பட்ட காசோலைகளை இலஞ்சமாகப் பெற்றுக்கொண்டதாக ஓய்வுபெற்ற பிரதி மதுவரி ஆணையாளர் சன்ன ஜயநாத் அல்விஸ் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
அதேவேளை, குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய நிறுவனத்தின் களஞ்சியசாலையில் கடமையாற்றிய மதுவரி கோப்ரல் சம்பத் ரணசிங்கவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் அவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட இரு சந்தேகநபர்களும் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.








