இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று (9) ஆரம்பமாகவுள்ளது.
ராவல்பிண்டி மைதானத்தில் நடைபெறவுள்ள இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்துள்ளது.இதற்கமைய, பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாடவுள்ளது.
இலங்கை நேரப்படி இப்போட்டி இன்று முற்பகல் 10 மணிக்கு ஆரம்பமானது.பாகிஸ்தான் அணியில் தையப் ஆரிஃப், தாஹா, அரஃபாத் மின்ஹாஸ் மற்றும் சாகிப் கான் ஆகிய நான்கு வீரர்கள் இன்றைய போட்டியில் டெஸ்ட் அறிமுகம் பெறுகின்றனர்.
அதேவேளை, இலங்கை அணி பிரதான சுழற்பந்து வீச்சாளர் எவரும் இன்றி களமிறங்கத் தீர்மானித்துள்ளது. இது டெஸ்ட் கிரிக்கெட்டில் மிகவும் அரிதான நிகழ்வாகக் கருதப்படுகின்றது.
குசல் மெண்டிஸ் தலைமையிலான இலங்கை அணியில் பசிந்து சூரியபண்டார, லஹிரு உதார, தினேஷ் சந்திமால், கமிந்து மெண்டிஸ், தனஞ்சய டி சில்வா, சொனால் தினுஷ, மிலன் ரத்நாயக்க, லஹிரு குமார, அசித பெர்னாண்டோ மற்றும் தில்ஷான் மதுஷங்க ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.








