இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் சபையின் (ECB) கீழ் இயங்கும் இங்கிலாந்து கிரிக்கெட் அணி தற்போது ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் ரி20 தொடர்களில் விளையாடி வருகிறது.
இதையடுத்து தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்கவுள்ள இங்கிலாந்து அணி, தொடர்ந்து பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு எதிரான தொடர்களிலும் விளையாட உள்ளது.
இதன் பின்னர், அடுத்த ஆண்டு ஜூன் மாதம் ஐந்து போட்டிகளைக் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடர் நடைபெறவுள்ளது.முக்கியத்துவம் வாய்ந்த இந்த ஆஷஸ் டெஸ்ட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ளது.
இதற்கிடையில், கடந்த 2025ஆம் ஆண்டு நடைபெற்ற தொடர்களின் மூலம் இங்கிலாந்து கிரிக்கெட் சபை சுமார் 158 கோடி ரூபாய் வருமானத்தை ஈட்டியிருந்தது.இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் சர்வதேச ஒளிபரப்பு உரிமையை சோனி பிக்சர்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது.
இதன் மூலம் கடந்த ஆறு ஆண்டுகளில் இங்கிலாந்து கிரிக்கெட் சபை சுமார் 2,323 கோடி ரூபாய் வருமானத்தை ஈட்டியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.சோனி பிக்சர்ஸ் நிறுவனத்துடனான ஒப்பந்தம் 2028ஆம் ஆண்டுடன் காலாவதியாகவுள்ளது.
இதற்கிடையில், இந்திய கிரிக்கெட் அணியுடனான எந்தவொரு தொடரும் இங்கிலாந்து கிரிக்கெட் சபையினால் இதுவரை ஒப்பந்தம் செய்யப்படவில்லை.
இதன் காரணமாக, 2027ஆம் ஆண்டில் இங்கிலாந்து கிரிக்கெட் சபை சுமார் 627 கோடி ரூபாய் வரையான நிதி இழப்பைச் சந்திக்க நேரிடும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.








