அனைத்து மோட்டார் சைக்கிள்கள் உள்ளிட்ட வாகனங்களையும் பதிவு செய்வது கட்டாயம் என மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
48 குதிரை வலு கொள்ளளவுடைய மோட்டார் சைக்கிள்களைப் பதிவு செய்ய வேண்டிய அவசியமில்லை எனச் சில மோட்டார் சைக்கிள் விற்பனையாளர்கள் தெரிவித்து வருவதாக அவதானிக்கப்பட்டுள்ளது.
எனினும், இவ்வாறான மோட்டார் சைக்கிள்களைப் பதிவு செய்யாமல் பொதுவீதிகளில் செலுத்திச் செல்லும் சாரதிகளுக்குப் பொலிஸாரால் அபராதம் விதிக்கப்படலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, மோட்டார் சைக்கிள்கள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களையும் உரிய முறையில் பதிவு செய்வது கட்டாயம் என மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் வலியுறுத்தியுள்ளார்.








