இன்று (22) முதல் மின்வெட்டை அமுல்படுத்த வேண்டிய அவசியம் இல்லை என தேசிய மின் கட்டமைப்பு இயக்குநர் நிறுவனம் (National System Operator) அறிவித்துள்ளது.
லக்விஜய மின் உற்பத்தி நிலையத்தின் இரண்டாவது மின் உற்பத்தி அலகு இன்று அதன் முழுமையான 270 மெகாவோட் உற்பத்தித் திறனுக்கு மீளக் கொண்டுவரப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, மின்சாரத் தேவையை முகாமைத்துவம் செய்வதற்காக முன்னர் அமுல்படுத்தப்பட்டு வந்த மின்வெட்டு நடவடிக்கைகளைத் தொடர வேண்டிய அவசியம் இல்லை எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.








