இலங்கையில் இன்று (23) வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடுகையில், வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாவின் பெறுமதி சிறிதளவு அதிகரித்துள்ளது.
இதன்படி, அமெரிக்க டொலரின் விற்பனைப் பெறுமதி 336 ரூபாவாகப் பதிவாகியுள்ளது.
செலான் வங்கி
செலான் வங்கியில் அமெரிக்க டொலரின் கொள்வனவு மற்றும் விற்பனை விலைகளில் மாற்றம் ஏற்படவில்லை. கொள்வனவு விலை 328.50 ரூபாவாகவும், விற்பனை விலை 337.75 ரூபாவாகவும் காணப்படுகிறது.
NDB வங்கி
NDB வங்கியில் டொலரின் கொள்வனவு விலை 328.30 ரூபாவிலிருந்து 327.90 ரூபாவாகக் குறைந்துள்ளதுடன், விற்பனை விலை 337.30 ரூபாவிலிருந்து 336.90 ரூபாவாகக் குறைந்துள்ளது.
மக்கள் வங்கி
மக்கள் வங்கியில் கொள்வனவு விலை 328.50 ரூபாவிலிருந்து 328.45 ரூபாவாகவும், விற்பனை விலை 336.65 ரூபாவிலிருந்து 336.59 ரூபாவாகவும் குறைந்துள்ளது.
கொமர்ஷல் வங்கி
கொமர்ஷல் வங்கியில் டொலரின் கொள்வனவு விலை 326.82 ரூபாவாகவும், விற்பனை விலை 336.75 ரூபாவாகவும் மாற்றமின்றிக் காணப்படுகிறது.
சம்பத் வங்கி
சம்பத் வங்கியிலும் அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 328.75 ரூபாவாகவும், விற்பனை விலை 336.75 ரூபாவாகவும் மாற்றமின்றிப் பதிவாகியுள்ளது.








