தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவினால் முன்னெடுக்கப்படவுள்ள விசேட டெங்கு ஒழிப்புத் திட்டம் இன்று (09) முதல் ஆரம்பமாகின்றது.
இதற்கமைய, இன்று முதல் எதிர்வரும் 14ஆம் திகதி வரை விசேட டெங்கு ஒழிப்பு வாரம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.டெங்கு தொற்று ஏற்படும் அபாயம் நிலவும் 74 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளை உள்ளடக்கிய வகையில் இத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதன்போது, சம்பந்தப்பட்ட சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல், கூட்டு டெங்கு பரிசோதனைக் குழுக்களை ஈடுபடுத்துதல், உரிமையாளர்களற்ற இடங்களில் டெங்கு நுளம்புகள் பெருகும் இடங்களை அடையாளம் கண்டு அழித்தல் மற்றும் சுத்தப்படுத்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
அத்துடன், பாடசாலைகள், பிரிவேனாக்கள், பல்கலைக்கழகங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்களை மையமாகக் கொண்ட விசேட துப்புரவுப் பணிகள் முன்னெடுக்கப்படுவதுடன், கட்டுப்பாட்டு அறையொன்றின் ஊடாக நாளாந்த நடவடிக்கைகளும் கண்காணிக்கப்படவுள்ளன.
தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவுடன் இணைந்து பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு, ‘க்ளீன் ஸ்ரீலங்கா’ (Clean Sri Lanka) செயலகம், இலங்கை பொலிஸ், முப்படையினர் மற்றும் ஏனைய தன்னார்வ அமைப்புகளும் இத்திட்டத்தில் பங்கேற்கவுள்ளன.








